முத்துப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் 4வது மாவட்ட மாநாடு – பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 10 December 2025

முத்துப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் 4வது மாவட்ட மாநாடு – பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.


முத்துப்பேட்டை, டிச. 10 :

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 4வது மாவட்ட மாநாடு, முத்துப்பேட்டை உதயமார்த்தாண்டபுரம் தனியார் மண்டபத்தில் மாவட்ட துணைச்செயலாளர் டி. சந்திரா தலைமையில் நடைபெற்றது.


மாநாட்டில் மாநில துணைச் செயலாளர் பி. எம். இளங்கோவன் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் டி. கணேசன் கலந்து கொண்டு வழிகாட்டி உரையாற்றினர்.

புதிய மாவட்ட நிர்வாகக் குழு தேர்வு

மாநாட்டில் 21 உறுப்பினர்கள் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. அதில்

  • தலைவர் – கோமலப்பேட்டை முருகானந்தம்

  • செயலாளர் – கே. பாலசுப்ரமணியன்

  • பொருளாளர் – டி. துர்க்கையம்மாள்

  • துணைத் தலைவர்கள் – குன்னூர் பாஸ்கர், கேப்டன் சேகர்

  • துணைச் செயலாளர்கள் – டி. சந்திரா, ஆர். பன்னீர்செல்வம்

போன்றவர்கள் பதவியேற்றனர்.


மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரம், கல்வி, போக்குவரத்து, மருத்துவம், அடிப்படை வசதிகள் ஆகியவை தொடர்பான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:

  1. முத்துப்பேட்டை, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரடி பஸ் வசதி ஏற்படுத்தல்.

  2. மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்று, பஸ் பாஸ், ரயில் பாஸ் உள்ளிட்ட சான்றிதழ்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட வேண்டும்.

  3. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கும் 35 கிலோ அரிசி மற்றும் குடிமனைப் பட்டா வழங்க வேண்டும்.

  4. மாற்றுத்திறனாளிகளின் நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

  5. உதயமார்த்தாண்டபுரம் தெற்கு — பள்ளியமேடு காமராஜர் தெரு மண் சாலையை சிமென்ட் சாலையாக மாற்ற வேண்டும்.

  6. உதயமார்த்தாண்டபுரம் ரெவுனி வடிகால் வாய்க்காலை சீரமைக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என மாநாடு வலியுறுத்தியது.

© tamilagakural.com | செய்தி & விளம்பர தொடர்புக்கு: 9843663662 |

No comments:

Post a Comment

Post Top Ad